×

வழித்தடம் 3, 5-ல் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்களை இயக்க ஏற்பு கடிதம் வழங்கப்பட்டது!

 

சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 3 மற்றும் 5-ல் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ இரயில்களை தயாரிப்பதற்கான ஏற்பு கடிதம் BEML நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 3 மற்றும் 5-ல் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 இரயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ இரயில்களை தயாரிப்பதற்கான ஏற்பு கடிதத்தை BEML நிறுவனத்திற்கு ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கியுள்ளது. இன்று (28.11.2024), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மெட்ரோஸில்,சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு.தி.அர்ச்சுனன், BEML நிறுவனத்தின் இயக்குநர் (இரயில் மற்றும் மெட்ரோ) திரு.ராஜீவ் குமார் குப்தாவிடம் இதற்கான ஏற்பு கடிதத்தை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் திரு.ஏ.ஆர்.ராஜேந்திரன், (மெட்ரோ இரயில்), திரு.ஆர்.முரளி, (நிதி மற்றும் கணக்குகள்), NKAB நிறுவனத்தின் குழுத்தலைவர் திரு.டோனி புர்செல், BEML நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் திரு.பிரவீன் குமார் மத்பால் (மெட்ரோ வணிகத் தலைவர்), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், NKAB,மற்றும் BEML நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.