×

சிக்கன் பார்சலில் வண்டுகள் செத்துக் கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி..!

 

மதுரை கேகே நகர் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் மதுரை சட்டக்கல்லூரி மாணவிகள் சிலர் நேற்று இரவு சிக்கன் பார்சல் வாங்கியுள்ளனர். அறைக்குச் சென்று அவர்கள் சிக்கன் பார்சலை பிரித்துப் பார்த்தபோது அதற்குள், சின்னதாய் இரண்டு வண்டுகள் செத்துக் கிடந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த மாணவிகள் சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்குச் சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் இது தொடர்பாக புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்கள் அதற்கு முறையான பதிலளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதைத் தொடர்ந்து சிக்கன் பார்சலில் வண்டுகள் இருப்பது தொடர்பான வீடியோ ஆதாரத்துடன், மதுரை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அந்த மாணவிகள் புகார் அனுப்பியுள்ளனர். சம்பந்தப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அண்மையில் மதுரையில் சிக்கன் சாப்பிட்ட ஒருவருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு உயிரிழந்துள்ள நிலையில், சட்டக் கல்லூரி மாணவிகளின் இந்தப் புகார் தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.