×

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்துகொள்வது நல்லதல்ல - உயர்நீதிமன்றம் கருத்து..!!

 

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல. கடவுளுக்கு மேலானவர்களாக  கருதுகிறார்கள் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

தீட்சிதர் பணி நீக்க விவகாரத்தில் அறநிலையத்துறை தலையிட தடை கோரி பொது தீட்சிதர்கள் குழு தாக்கல் செய்த வழக்கு  சென்னை உயர்நீதிமன்றத்தில்  நீதிபதி தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.  விசாரணையின்போது  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல. கடவுளுக்கு மேலானவர்களாக  கருதுகிறார்கள் என காட்டமாக தெரிவித்தார்.  நடராஜர் கோவிலில், தீட்சிதர்களால் தனக்கும் பிரச்னை ஏற்பட்டது என்றும் நீதிபதி கூறினார்.  

மன கஷ்டங்களை போக்க வரும் மக்கள் அவமானப் படுத்தபடுகின்றனர் என்றும்,  பக்தர்கள் வரும் வரை தான் கோவில்; இல்லாவிட்டால் கோவில் பாழாகி விடும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.  கோவிலுக்கு வருபவர்கள் அனைவரும் சண்டைக்கு வருவது போலவே  தீட்சிதர்கள் நினைக்கின்றனர்.  காசு கொடுத்தால் தான் பூ கிடைக்கும். இல்லையென்றால் விபூதி கூட கிடைக்காது என்றும் நீதிபதிகள் கூறினர்.  மேலும்,  பொது தீட்சிதர்கள் குழு தாக்கல் செய்த மனுவுக்கு அக்.21ம் தேதிக்குள் பதிலளிக்க இந்து சமய அறநிலைய துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.