×

தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. 

 


 புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில்  நடைபெற்று வரும் சுதந்திர தின விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.  

இந்தியாவின் 78-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும்  கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை நடத்த பிரமாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள கொடி மரம் அலங்கரிக்கப்பட்டு அதன் அருகே மேடை அமைக்கப்பட்டுள்ளது.  முன்னதாக கோட்டை கொத்தளத்திற்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா வரவேற்றார்.   தொடர்ந்து முப்படை அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் அறிமுக நிகழ்வு மரபுப்படி நடைபெற்றது.  

தொடர்ந்து திறந்தவெளி ஜீப்பில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றபடி விழா மேடைக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காலை 9 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் வைக்கப்பட்டிருக்கும்  4 ஆண்டாக மூவர்ணக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, சபாநாயகர் அப்பாவு, தயாநிதிமாறன் எம்.பி., மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரையை நிகழ்த்தி வருகிறார்.