×

சான் பிரான்சிஸ்கோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குவிந்த முதலீடுகள்..!

 


சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் சென்னையில் செமி கண்டக்டர் உற்பத்தி மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக சான் பிரான்சிஸ்கோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில், சென்னையில் செமி கண்டக்டர் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்ப மையத்தை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.  அமெரிக்காவைச் சேர்ந்த  Applied Materials நிறுவனம் இந்த உற்பத்தி மையத்தை தொடங்கவுள்ளது.  இது செயற்கை நுண்ணறிவு( AI) தொழில்நுட்ப வசதிகளும் கொண்ட அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சி மையமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும், கோவையில், ₹150 கோடி முதலீட்டில் செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க Yield Engineering Systems நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 300 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை செம்மஞ்சேரியில், ₹250 கோடி முதலீட்டில் செமி கண்டக்டர் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மையம் அமைக்க Microchip நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 1500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 

சென்னை அடுத்த சிறுசேரியில் ரூ.450 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி மையம் அமைக்க நோக்கியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்மூலம் 100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. 

இதுமட்டுமின்றி Paypal நிறுவனத்துடன் 1000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 

மேலும், ஓமியம் நிறுவனத்துடன் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், ரூ.400 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தமும், Geak Minds நிறுவனத்துடன் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்ம் கையெழுத்தானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.