×

பெங்களூரு புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

எதிர்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூரு புறப்பட்டார்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகள் வலுவான கூட்டணி அமைக்க ஆயத்தமாகி வருகின்றனர்.  7 எதிர்கட்சிகள் பங்கேற்றன. இதனைத்தொடர்ந்து   2-வது கூட்டம் கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் வருகிற 17, 18 தேதிகளில்( இன்றும் நாளையும்) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மாலை 6 மணியளவில்  பெங்களூரு தாஜ் வெஸ்ட் எண்டு ஓட்டலில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.  இந்தமுறை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடுகிறார்கள். இன்றைய தினம் தலைவர்கள் அனைவருக்கும் விருந்து அளிக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ்,  தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்,  விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சிகர சமத்துவ கட்சி  உள்ளிட்ட 24 கட்சிகளின் தலைவர்கள்  பங்கேற்கின்றன. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார் பேட்டை இல்லத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையம் செல்லும் அவர், அங்கிருந்து பெங்களூரு செல்கிறார்..