×

’ராமருக்கு மாட்டுக்கறி பிரியாணி ரெடி’... திமுகவினர்- பாஜகவினரிடையே மோதல்

 

அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமருக்கு மாட்டுக்கறி பிரியாணி ரெடி என  சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட  திமுக பிரமுகரின் வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினருக்கும்  திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலால்  பரபரப்பு ஏற்பட்டது. 


அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோவில் கும்பாபிஷேகம் பெரும் விமர்சியாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் திமுக மாநில நிர்வாகி தென்றல் செல்வராஜ்  மற்றும் அவருடைய மகன் மணிமாறன் தென்றல் ஆகியோர் தங்களது முகநூல் பக்கத்தில் ராமர் கோவில் திறப்பு விழா ராமருக்கு பிடித்த மாட்டுக்கறி பிரியாணி ரெடி என பதிவிட்டிருந்தனர். 

இந்த பதிவிற்கு கண்டண தெரிவிக்கும் வகையில் பொள்ளாச்சி நகர பாரதிய ஜனதா கட்சி செயலாளர் பரமகுரு தலைமையில் திமுகவைச் சேர்ந்த மணிமாறன் தென்றல் வீட்டிற்கு  ராமர் படத்துடன் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், அப்போது பாஜக - திமுக  இரு தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.