×

குளம்போல் தேங்கிய மழைநீர்! சவிதா கல்லூரியில் அவசர சிகிச்சை மையம் மூடல்

 

கனமழை காரணமாக ஸ்ரீபெரும்புதூரில் தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியதால் மாணவர்கள் மற்றும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் அவசர சிகிச்சை மையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் அவ்வப்போது கனமழையானது பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று நேற்று முன்தினம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கனமழையானது பெய்தது இதனால் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் செயல்படும் சவிதா மருத்துவக் கல்லூரியில் மழை நீர் குளம் போல் தேங்கியது.

இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர் கல்லூரி வளாகத்தில் நுழைவாயிலில் மூன்றடிக்கு மேல் தண்ணீர் நின்றதால் வாகனங்கள் உள்ளே செல்ல முடியாத நிலை உருவானது குறிப்பாக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்களும் செல்ல முடியாததால் மருத்துவமனையில் செயல்பட்டு வந்த அவசர சிகிச்சை மையம் தற்காலிகமாக மூடப்பட்டது. மருத்துவமனை முன்பு உள்ள சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது மழைநீர் செல்லும் கால்வாய்கள் மூடப்பட்டதால் அதேபோல் மருத்துவமனையில் இருந்து மழைநீர் வெளியே விட அமைக்கப்பட்டிருந்த கால்வாய்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூடியதாலும் மழை நீர் தேங்கியதாக கூறப்படுகிறது.