சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் அறிவிப்பு!
Mar 10, 2024, 11:45 IST
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி-நத்தம் சாலையின் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் காலராக பணிபுரிந்துவரும் திரு ராஜேஷ் (PC 699 SCPR), வயது 35, த/பெ. ரத்தினசாமி என்பவர் நேற்று (09.03.2024) இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி காவல் சரகம் சீர்காழி நத்தம் சாலையின் தடுப்பில் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும், வேதனையடைந்தேன்.