×

பென்னாகரம் அருகே விஷப்பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமி - முதலமைச்சர் இரங்கல்

 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம், அலகட்டு கிராமத்தில் விஷப்பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி மாவட்டம். பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி உள்வட்டம், வட்டுவனஅள்ளி வருவாய் கிராமத்திற்குட்பட்ட, அலகட்டு மலை கிராமத்தைச் சேர்ந்த திரு.ருத்ரப்பா திருமதி.சிவலிங்கி தம்பதியரின் மகள் கஸ்தூரி (வயது 14) என்பவர் இன்று (28.11.2024) பிற்பகல் அவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் கீரை பறித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விஷப்பாம்பு கடித்ததில், உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

மேலும், விஷப்பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.