×

தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பொறுப்பாளர் சந்திரா சேதுராமன் மறைவு - முதலமைச்சர் இரங்கல்!

 

"தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பொறுப்பாளர் சந்திரா சேதுராமன் நேற்று (18-11-2024) மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பொறுப்பாளர் திருமதி சந்திரா சேதுராமன் அவர்கள் நேற்று (18-11-2024) மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். அன்னாரை இழந்து வாடும் அவரது கணவரும் சாஸ்த்ரா பல்கலைக்கழக வேந்தருமான திரு. ஆர். சேதுராமன் அவர்களுக்கும், மகன்கள் திரு. வைத்திய சுப்ரமணியம் (துணைவேந்தர்), திரு. சுவாமிநாதன் (புல முதன்மையர்), மகள் திருமதி பிரியா மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.