ஔவையார் விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் பாமாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
Mar 8, 2024, 17:32 IST
2024ம் ஆண்டுக்கான ஔவையார் விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் பாமா (எ) பாஸ்டினா சூசைராஜ் அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கமான எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சாதி, மதம், பாலினம், இனம் எனப் பல்வேறு அடையாளங்களினூடே ஒடுக்குமுறையின் அரசியலை அழுத்தமாகப் பேசும் 'கருக்கு' எனும் தன்வரலாற்றுப் புதினத்தின் வழியாக உலக அளவில் கவனம் ஈர்த்த எழுத்தாளர் #பாமா (எ) பாஸ்டினா சூசைராஜ் அவர்கள் தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டுக்கான ஔவையார் விருதைப் பெறுகிறார்.