×

தமிழக மீனவர்களை மீட்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

 
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாண்புமிரு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 மீளவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று (11-3-2024) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் இலங்கைக் கடற்படையினர் 10:03. 2024 அன்று. இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் மூன்று மீன்பிடி விசைப்படகுகளை சிறைபிடித்துள்ளதோடு 72 மீனவர்களை கைது செய்துள்ளதாகக் குறிப்பிட்டு இது நமது நாட்டு மீனவர்களின் நலனை பாதிக்கும் பெரும் கவலைக்குரிய சம்பவம் என்பதால், மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

நமது மீனவர்கள் பல தலைமுறைகளாக நமது நாட்டிற்கு அருகே உள்ள கடற்பரப்பில் பாரம்பரியமாக மீன்பிடித்து வருகின்றனர் என்றும் மீன்பிடித் தொழில்தான் அவர்களது வாழ்வாதாரமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். சமீபகாலமாக அவர்கள் இலங்கைக் கடற்படையினரால் துன்புறுத்தப்படுவதும் கைது செய்யப்படுவதும் அவர்களது மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் அதிகரித்து வருவதாகக் கவலையோடு குறிப்பிட்டுள்ளார். இத்தகைய கைது நடவடிக்கைகள், பாதிக்கப்படும் மீனவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பெரும் துயரத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மீளவர்களின் வாழ்வாதாரத்தையும் பெருமளவில் பாதிப்பதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் கட்டிக்காட்டியுள்ளார்.
எனவே உணர்வுப்பூர்வமான இந்தப் பிரச்சினையின் தன்மையைக் கருத்தில்கொண்டு, மீளவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட விரைவாகவும், தீர்க்கமாகவும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு முக ஸ்டாயின் அவர்கள் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.