×

தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வீரமுழக்கமிட்டவர் தேவர் திருமகனார் - மு.க.ஸ்டாலின் புகழாரம்

 

தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வீரமுழக்கமிட்டவர் தேவர் திருமகனார் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். 

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117ஆவது ஜெயந்தி விழாவும் 62வது குருபூஜை விழாவும் அவரது நினைவிடம் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தேவர் ஜெயந்தி விழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில்,  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வீரமுழக்கமிட்டவர் தேவர் திருமகனார். முத்துராமலிங்கத் தேவரின் நினைவாக பல்வேறு திட்டங்களை தி.மு.க அரசு செயல்படுத்தி வருகிறது. பசும்பொன் நினைவிடத்தில் ரூ.1.55 கோடி செலவில் முத்துராமலிங்கத் தேவர் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. தியாகிகளை போற்றக்கூடிய அரசாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது என கூறினார்.