×

அரியலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கள ஆய்வு

 

அரியலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறதா என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். தனது முதல்கட்ட கள ஆய்வை கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையில் தொடங்கினார். அங்கு பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை ஆய்வு செய்தார். இதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்து தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். 

இந்த நிலையில், இன்று அரியலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார். அரியலூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ளும் அவர்,  மகிமைபுரத்தில் காலணி தொழிற்சாலைக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார், ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டத்தின் விரிவாக்கத்தினை தொடங்கி வைக்கிறார்.