×

"அவதூறுகளைத் துடைத்தெறிந்த ஊடகவியலாளர் முஹம்மது ஜுபைருக்கு விருது" - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!!

 

 வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட குடியரசு நாள் விருதுகளை 14 பேருக்கு வழங்கினேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், பொய்ச் செய்திகள் திட்டமிட்டுக் காட்டுத்தீயாய்ச் சமூக வலைத்தளங்களில் பரப்படுகிறது. இந்த நிலையில் உண்மைகளை உரக்கச் சொல்லி மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் சில ஊடகங்கள் செய்கின்றன. அப்படிச் செயல்பட்டு அவதூறுகளைத் துடைத்தெறிந்த ஊடகவியலாளர் திரு.  @zoo_bear அவர்களுக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது வழங்கப்பட்டது.


அழியாச் செல்வமான கல்விக்குத் தனது சொத்தான நிலத்தைக் கொடையாக அளித்திட்ட ஆயி அம்மாள் அவர்களுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருதும்,

பெரு வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியவர்களுக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட குடியரசு நாள் விருதுகளை 14 பேருக்கு வழங்கினேன்.

இவர்களுக்கான பாராட்டுகள் சமூகச் சேவை செய்வதற்கான ஊக்கமாக உங்களுக்கு அமையட்டும்! என்று குறிப்பிட்டுள்ளார்.