×

டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி பேருந்து! போக்குவரத்து துறை அசத்தல்

 

டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி பேருந்துகளை போக்குவரத்து துறை அறிமுகம் செய்துள்ளது.


அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக தொலைதூரம் பயணம் மேற்கொள்ளும் பேருந்துகளில் முதல் முறையாக, டீசல் எரிபொருளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த சுருக்கப்பட்ட இயற்கை எரிவாய்வு (CNG) பயன்படுத்தி, மறுசீரமைப்பு செய்த பேருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்து திருச்சி - சென்னை வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.