×

ராகிங் விவகாரம்- பாதிக்கப்பட்ட மாணவர் பகீர் குற்றச்சாட்டு

 

சீனியர்கள் பணம் கேட்டால் இல்லை என சொல்லுவியா என்று சொல்லி தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவர் புகார் அளித்துள்ளார்.

கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவருக்கு சீனியர் மாணவர்கள் மொட்டை அடித்துள்ளனர். மது குடிப்பதற்காக பணம் கேட்டு ஜூனியர் மாணவர் தாக்கி மொட்டை அடித்துள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  இதன் அடிப்படையில் சீனியர் மாணவர்கள் மாதவன், மணி, வெங்கடேஷ், தரணிதரன், ஐயப்பன், சந்தோஷ் மற்றும் யாலிஸ் ஆகிய ஏழு மாணவர்களை பீளமேடு  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

இந்நிலையில் சீனியர்கள் பணம் கேட்டால் இல்லை என சொல்லுவியா என்று சொல்லி தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவர் புகார் அளித்துள்ளார். 5 மணி நேரம் வெளியே விடமால் இரவு 11.30 மணி முதல் காலை 4 மணி வரை அடைத்து வைத்து அடித்து கொடுமைப்படுத்தினார்கள் என்றும் பாதிக்கப்பட்ட மாணவர் தெரிவித்துள்ளார். கோவையில் தனியார் கல்லூரி மாணவர்  ராகிங் செய்யப்பட்ட விவகாரத்தில், முதல் தகவல் அறிக்கையும் வெளியாகியுள்ளது. இச்சம்பவம்  8 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான மாணவரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மிரட்டுதல், தாக்குதல், ராகிங் தடுப்பு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.