தலைத்தூக்கும் ’ரூட் தல’ விவகாரம்- ரயிலில் கல்லூரி மாணவர்கள் மோதல்
Aug 2, 2024, 17:32 IST
சென்னை புறநகர் மின்சார ரயிலில் கல்லூரி மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை தாம்பரம்- கடற்கரை செல்லும் மின்சார ரயிலில் சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். கையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ரயில் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதால் மற்ற பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதில் மின்சார ரயில் ஜன்னல் கண்ணாடி உடைந்து 2 பயணிகள் காயமடைந்தனர்.
இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், அதனை வைத்து மாணவர்களை மாம்பலம் ரயில்வே போலீசார் தேடிவருகின்றனர்.