×

வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை உயர்வு.!

 


 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.  

சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதில் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் 14 கிலோ எடை கொண்ட  சமையல் எரிவாயு மற்றும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதம் முதல் தேதியில் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. 

அதன்படி மாதத்தின் முதல் நாளான இன்று கேஸ் சிலிண்டர்கள் விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதில் 19 கிலோ எடை கொண்ட வணிக பாயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.   7 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து  ஒரு வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் ரூ.1,817க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் 14 கிலோ எடை வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.818.50 காசுகளுக்கு விற்கப்படுகிறது.