காமன்வெல்த் 2026- பேட்மிண்டன், மல்யுத்தம் உள்ளிட்ட 9 விளையாட்டுகள் நீக்கம்
காமன்வெல்த் போட்டியில் இருந்து ஹாக்கி, துப்பாக்கி சூடுதல், மல்யுத்தம், பேட்மிண்டன் போன்ற போட்டிகளை நீக்கப்பட்டுள்ளன.
காமன் வெல்த் கேம்ஸ் 2026 போட்டி ஸ்காட்லாண்டில் கிளாஸ்கோவில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி ஜூலை 23-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இருந்து மல்யுத்தம், ஹாக்கி, பேட்மிட்டன், துப்பாக்கி சுடுதல், பேட்மிண்டன், கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ், டிரையத்லான், பீச் வாலிபால் மற்றும் ரக்பி செவன்ஸ் போன்ற போட்டிகள் நீக்கப்பட்டுள்ளன். இதில் மல்யுத்தம் போட்டி நீக்கப்பட்டது மிகந்த ஏமாற்றம் ஆக உள்ளது. காரணம் இந்தியாவைப் பொறுத்தவரை அதிக பதக்கங்கள் மல்யுத்த போட்டியில் தான் கிடைக்கும். இதுவரை நடந்த காமன்வெல்த் போட்டிகளில் 114 பதக்கங்களை இந்தியா பெற்றுள்ளது. இதில் 49 தங்கப்பதக்கங்கள் 39 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 26 வெண்கல பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், பேட்மிட்டன் போன்ற போட்டிகளிலும் இந்தியா அதிகமாக பதக்கங்களை வென்று வந்தது. ஸ்காட்லாண்டில் நடைபெற உள்ள காமன்வெல்த் கேம்ஸ் 2026 போட்டியில் அந்த நாட்டில் இது போன்ற போட்டிகளுக்கு முக்கியத்துவம் இல்லாத காரணத்தினால் காமன்வெல்த் கேம்ஸ் அமைப்புக்கு ஒரு சில கோரிக்கைகளை வைத்து இந்த விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் காமன்வெல்த் போட்டியில் இந்தியா பதக்கம் பெறுவது ஏமாற்றமாக உள்ளது. மல்யுத்தம், ஹாக்கி போன்ற போட்டிகளை நடத்தி இருந்தால் இந்தியா அதிக அளவில் பதக்கங்களை வென்று இருக்கும்