’இளம் பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய இடும்பாவனம் கார்த்திக்’ அவதூறு பரப்பிய திருச்சி சிவா மீது புகார்
நானும், நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு. இடும்பாவனம் கார்த்திக் அவர்களும் பேசிய தனிப்பட்ட அலைபேசி உரையாடல்களையும், புகைப்படங்களையும் திருடி, தன்னுடைய x" தளத்தில் வெளியிட்டு, அவதூறு பரப்பும் திருச்சி சூர்யா (எ) மணிவண்ணன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இடும்பாவனம் கார்த்தி காதலி மோனிஷ் ராய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் மோனிஷ் ராய் அளித்துள்ள புகார் மனுவில், “வணக்கம். நானும், இடும்பாவனம் கார்த்திக் என்பவரும் கடந்த ஐந்து வருடங்களாக ஒருவரை ஒருவர் நேசித்து பழகி வருகிறோம். திரு.இடும்பாவனம் கார்த்திக் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார். அவர் தான் சார்ந்த கட்சியின் கொள்கைகளையும், தற்போது ஆளுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் குறைகளையும் எடுத்துக்காட்டி, பல்வேறு தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களிலும் நடைபெறும் விவாதங்கள், நேர்காணல்கள் ஆகியவற்றில் பங்குகொண்டு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். இதனால், அரசியல்ரீதியாக அவருக்கு எதிரிகள் உருவாகுவதுடன், ஒரு சில அரசியல் எதிரிகள் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொய் செய்திகளையும், ஆபாசமான கருத்துகளையும் பரப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், 18.07.24 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினர் திரு.திருச்சி சிவா அவர்களின் மகன் திருச்சி சூர்யா என்கிற மணிவண்ணன், அவருடைய ×' தளத்தில், 'இளம் பெண்ணை கர்ப்பம் ஆக்கி ஏமாற்றிய இடும்பாவனம் கார்த்திக்' எனும் தலைப்பிட்டு, 2 நிமிடங்கள் 56 வினாடிகள் ஓடக்கூடிய குரல் பதிவில், 1 நிமிடம் 26 வினாடிகள் முதல் 2 நிமிடம் 56 வினாடிகள் வரை பல மாதங்களுக்கு முன்பு நானும், திரு.இடும்பாவனம் கார்த்திக் அவர்களும் பேசிய அலைபேசி உரையாடல்களை வெளியிட்டுள்ளார். இந்த மேற்கண்டப் பதிவை இலட்சணக்கணக்கானோர் பார்த்தும், கேட்டும், மறுபதிவிட்டும் வருகின்றனர். அந்தப் பதிவின் விமர்சனப்பிரிவில் பல்வேறு நபர்கள் ஆபாசமான கருத்துகளையும் பதிவிட்டுள்ளனர். மேலும், மற்றொரு பிரிவில், 'அண்ணனை மிஞ்சிய தம்பிகள்' எனும் தலைப்பில் என்னுடைய அனுமதியில்லாமல் என்னுடைய புகைப்படங்களையும், அதில் பொய்யான செய்திகளையும் பதிவிட்டுள்ளார். அவர் இந்த உரையாடல்களை நாம் தமிழர் கட்சி மீதும், திரு.இடும்பாவனம் கார்த்திக் மீதுமுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்களுக்கிடையே அவருடைய நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் மேற்கண்ட எங்கள் இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட உரையாடலை போன் ஹேக்கிங் (Phone Hacking) மூலம் திருடியோ, பிறரின் அலைபேசியிலுள்ள உரையாடல்களை திருடியோ தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
எனவே, என்னுடைய தனிப்பட்ட உரையாடல்களையும், புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் சட்டவிரோதமாக வெளியிட்டு தகவல் தொழில்நுட்பச் சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் புரிந்துள்ளார். எனவே, மேற்கண்ட திருச்சி சூர்யா என்கிற மணிவண்ணன் என்பவர் மீது வழக்குப் பதிவுசெய்து தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அவருடைய 'X' தளத்தில் பதிவிட்டுள்ள என்னுடைய உரையாடல் அடங்கியப் பதிவை முற்றிலும் நீக்கிட தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்