×

சீமான் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் 
 

 

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் திருச்சி காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.  இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து இருந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் , கொலை செய்பவர்கள், சாராயம் காய்ச்சிபவர்கள் மீது பாயாத வழக்கு மேடையில் பேசியதற்காக பாய்ந்திருக்கிறது.  என்னைவிட சாட்டை துரைமுருகன் அவதூறாக பேசிவிட்டாரா ? என்ன என்னை கைது செய்யுங்கள் பார்ப்போம்.  என்னை சுற்றி இருப்பவர்களை கைது செய்து எனக்கு நெருக்கடி தர நினைக்கிறார்கள்.

 கருணாநிதி குறித்த பாடலை மேடையில் பாடியதற்காக கைது செய்திருக்கிறார்கள். அந்த பாடலை எழுதியவர், பாடியவரை கைது செய்தார்களா? இப்போது நான் அந்த பாடலை பாடுகிறேன். என்மேல் வழக்கு பதிவு செய்யுங்கள். அதிகாரத்திற்கு வந்தவுடன் உங்கள் தந்தைக்கு புனிதர் பட்டம் கட்ட பார்க்கிறீர்கள்.  அவர் தமிழின துரோகி.  முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் பேசிய அவதூறுகள் குறித்த காணொளிகள் இருக்கிறது. உங்கள் கட்சிக்காரர்கள் பேசினால் கருத்துரிமை? நாங்கள் பேசினால் அவதூறா?  உங்கள் தந்தை என்ன இறைத்தூதரா என்று சீமான் விமர்சித்திருந்தார்.