×

 பத்ம விருது வென்ற அனைவருக்கும் வாழ்த்துகள் - அன்புமணி 
 

 

 பத்ம விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 132 பேருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அன்புமணி கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சமூகவலைதள பக்கத்தில்,  2024-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் மொத்தம்  132 பேருக்கு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.  இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது சிறந்த விருதான பத்மவிபூஷன்  விருதுக்கு தேர்வாகியுள்ள இந்தியக் குடியரசின் முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, முன்னாள் மத்திய அமைச்சர் சிரஞ்சீவி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைஜயந்திமாலா உள்ளிட்ட ஐவருக்கும்,  பத்மபூஷன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட  17 பேருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.