சென்னை மெட்ரோ ரயில்களில் உணவு உட்கொள்ள அனுமதியில்லை

 
s

மெட்ரோ ரயில்களில் உணவு உட்கொள்ள அனுமதியில்லை என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அளித்து வருகிறது. இதனால் நாளுக்குநாள் மெட்ரோ ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரி்த்துவருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் மெட்ரோ ரயிலை பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 10.52 கோடியாகும். இந்த நிலையில் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஒரு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.