×

தமிழ்த்தாய் வாழ்த்தில் விடுபட்ட’திராவிட நல்திருநாடு’... ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் சர்ச்சை

 

சென்னை டிடி தமிழ் டிவியில் நடைபெற்றுவரும் இந்தி மாத கொண்டாட்ட விழாவின்போது தமிழ்த் தாய் அவமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் உள்ள  தூர்தர்ஷன் தமிழ் எனப்படும் சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும், சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்களும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளில் தமிழக ஆளுனர்  ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற அந்த விழாவில் "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்" என்ற வரியை விடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது "திராவிடநல் திருநாடும்" என்ற வரியை தவிர்த்து உள்ளார் ஆளுநர்.

ஆளுநர் ரவி பங்கேற்ற விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் திட்டமிட்டு ‘திராவிடநல் திருநாடு’ என்ற வரி  தவிர்க்கப்பட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முன்னதாக தமிழக அமைச்சரவையில்  ‘திராவிட’ என்ற வார்த்தையை ஆளுநர் ரவி தவிர்த்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.