×

இன்று முதல் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி!

சென்னை அரசு மருத்துவமனைகளில், இன்று முதல் 24 மணி நேரமும், கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இருப்பினும் உற்பத்தி குறைவால், மத்திய அரசு, மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி
 

சென்னை அரசு மருத்துவமனைகளில், இன்று முதல் 24 மணி நேரமும், கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இருப்பினும் உற்பத்தி குறைவால், மத்திய அரசு, மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. விரைவில் பொதுமக்களுக்கு தடுப்பூசியை விரைவாக செலுத்த வேண்டும் என்ற இலக்குடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் 24 மணி நேர தடுப்பூசி மையத்தை, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். அதன்படி தமிழகத்தின் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் இன்று முதல் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்குகிறது.