×

36ஆவது முறையா? இது என்னடா செந்தில் பாலாஜிக்கு வந்த சோதனை !!

 

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜி கடந்த 10 மாதங்களாக மேலாக சிறையில் இருக்கிறார்.  ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கின் விசாரணை நேற்று  உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்கில் செந்தில் பாலாஜி 320 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார்.

வழக்கை உடனடியாக விசாரித்து செந்தில் பாலாஜிக்கான இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. இருப்பினும் வழக்கின் விசாரணையை மே 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.  காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலை ஜூன் 4ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்  நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.  சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்