தொடரும் சிறைவாசம்... செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 41வது முறையாக நீட்டிப்பு
Updated: Jun 25, 2024, 15:12 IST

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். கைதாகி ஓராண்டாகியுள்ள அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 40வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 19ஆவது முறை உத்தரவிட்டது. நீதிமன்ற காவல் (ஜூன் 25-ம் தேதி) இன்று வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.