×

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 57வது முறையாக நீட்டிப்பு

 

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 57வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் 14ம் தேதி  கைது செய்யப்பட்டார். அவருடைய காவல் நீட்டிக்கப்பட்டுவரும் நிலையில், பலமுறை ஜாமின் கோரி அவர் அளித்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் ஓராண்டுக்கும் மேலாக  சிறையிலேயே காலம் தள்ளி வரும் அவர், பலமுறை உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில் காணொலி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் செப்டம்பர் 3-ஆம் தேதி வரை காவல் நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 57-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். சிட்டி யூனியன் வங்கியின் கரூர் கிளையின் தலைமை மேலாளராக பணியாற்றிய ஹரிஷ்குமார் ஆஜராகாததால், இன்று குறுக்கு விசாரணை நடைபெறவில்லை.