×

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்!

 

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு சென்னை குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.  

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் ட்விட்டரில் தாங்கள் பிரிந்து விட்டதாக பதிவிட்டனர். இதனையடுத்து திருமண உறவில் இருந்து பிரிந்து வாழந்த நிலையில், பரஸ்பரம் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு தொடர்பாக ஐஸ்வர்யா ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். இந்த நிலையில், கடந்த 21ம் தேதி நடிகர் தனுஷ் விசாரணைக்கு ஆஜரானார். நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு சென்னை குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. திருமண பந்தத்தில் இருந்து பிரிவதில் உறுதியாக இருப்பதாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் தெரிவித்து இருந்தனர். இதன் காரணமாக இருவருக்கும் விவாகரத்து வழங்கி  சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.