×

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம்- தமிழ்நாடு அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

 

தன் மீது 2-வது முறையாக குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டதை எதிர்த்து சவுக்கு சங்கர் தொடர்ந்த மனு மீது ஆகஸ்ட் 27ம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் காவலர்களை அவதூறாக பேசியது, ஹோட்டல் அறையில் கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில்  கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் முதலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் வழக்கு விசாரணைக்காக சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில்  அவ்வப்போது வழக்கு விசாரணைக்காக அவர் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார். பெண் காவலர்கள் குறித்துப் பேசியது உட்படப் பல்வேறு வழக்குகளில்  சவுக்கு சங்கர் ஜாமின் பெற்றுள்ள நிலையில், குண்டர் சட்டமும் ரத்தாகியதால் ஒருசில நாட்களில் விடுதலையாகலாம் எனும் வாய்ப்பிருந்தபோது, கஞ்சா வைத்து இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

இந்நிலையில் தன் மீதான குண்டர் சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்த பிறகு, மீண்டும் இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தின் கீழ் தன் மீது வழக்கு பதியப்பட்டதை எதிர்த்து சவுக்கு சங்கர் தொடர்ந்துள்ள மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அவரது தாயார் கமலா உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 27ம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு  உத்தரவு பிறப்பித்தது.