×

கமல்ஹாசன் பிறந்த நாளையொட்டி கோவையில் மநீம சார்பில் ரத்த தான முகாம்!

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி கோவையில் மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது. 

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை நகர மக்கள் நீதி மய்யம் சார்பில் சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில்  நடைபெற்ற ரத்த தான முகாமுக்கு கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் 
தங்கவேலு  அவர்கள் தலைமை வகித்தார்.  கோவை மண்டலச் செயலாளர் ரங்கநாதன் அவர்கள் ரத்த தானம் வழங்கி, முகாமைத் தொடங்கிவைத்தார். விவசாய அணி மாநிலச் செயலாளர் மயில்சாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். முகாமுக்கான ஏற்பாடுகளை சிங்காநல்லூர் மநீம மாவட்டச் செயலாளர் மயில் கணேஷ் அவர்கள் மற்றும் சிங்காநல்லூர் பகுதி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இந்த முகாமில், நற்பணி அணி கோவை மண்டல அமைப்பாளர் சித்திக் அவர்கள், ஊடகம் & செய்தித்தொடர்பு கோவை மண்டல அமைப்பாளர் செவ்வேல் அவர்கள், கோயம்புத்தூர் தெற்கு மநீம மாவட்டச் செயலாளர் பிரபு அவர்கள், கிணத்துக்கடவு மநீம மாவட்டச் செயலாளர் சிவா கோயம்புத்தூர் வடக்கு  மநீம மாவட்டச் செயலாளர் தனவேந்திரன் அவர்கள், சூலூர் மநீம மாவட்டச் செயலாளர் வரதராஜ் அவர்கள், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, ரத்த தானம் வழங்கிய கட்சியினர் 52 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.