×

கடலூரில் கொல்லப்பட்ட ஐ.டி ஊழியரின் “லிவ் இன் காதலி” கிளப்பிய பகீர்

 

கடலூர் மாவட்டம் காராமணிக்குப்பம் பகுதியில் தாய், மகன், பேரன் ஆகிய மூன்று பேர் கொலை செய்து எரிக்கப்பட்டனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி இன்று நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் உயிரிழந்த சுகந்தகுமார் உடன் திருமணம் ஆகாமல் லிவ் இன் டூகெதர் முறையில் வாழ்ந்தவரும் உயிரிழந்த 10 வயது சிறுவனின் தாயுமான அஞ்சும் சுல்தானாவிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. 

பெங்களூரில் இருந்து வந்த இந்த பெண்ணிடம் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் காலை முதல் பிற்பகல் வரை போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவரை விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறுவனின் உடலை பார்க்க போலீசார் அனுமதி அளித்தனர். அதன்பிறகு மீண்டும் மாலை நெல்லிக்குப்பம் காவல் நிலையத்திற்கு அவர் வரவழைக்கப்பட்டு அவரிடம் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் 4 மணி நேரம் நேரடி விசாரணை மேற்கொண்டார். இரவு 10 மணி வரை இந்த விசாரணை நடைபெற்றது.

விசாரணைக்கு பின் பேட்டி அளித்த அஞ்சும் சுல்தானா,  “எனக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இதனிடையே நானும் சுகந்தகுமாரும் பெங்களூருவில் வேலை பார்க்கும்போது திருமணம் செய்துகொள்ளாமல் லிவ் இன் டூகெதரில் வாழ்ந்தோம். அப்போது பிறந்த குழந்தையை நான் சுகந்தகுமாரிடம் கொடுத்தேன், தற்போது எனது குழந்தையை நான் இழந்துள்ளேன். ஒரே கேள்வியை திரும்பத் திரும்ப பத்து பேர் கேட்பதால் மன அழுத்தத்திற்கு உள்ளானேன். இக்குற்றத்திற்கு காரணமானவர்களை நிச்சயம் காவல்துறை கண்டுபிடித்து தண்டனை அளிக்க வேண்டும். உண்மை வெளியில் வரவேண்டும்” என தெரிவித்தார். நெல்லிக்குப்பத்தில் நடைபெற்ற இக்கொடூர கொலை குற்றத்தில் இதுவரை இதுவரை துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருவது குறிப்பிடத்தக்கது.