×

பாலம் உள்வாங்கியதால் கடலூர்- புதுச்சேரி சாலை துண்டிப்பு

 

புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் இடையார்பாளைய மேம்பாலம் வெள்ளத்தால் சேதமடைந்து உள்வாங்கியதால் பரபரப்பு  ஏற்பட்டது.

பெஞ்ஜல் புயல் புதுச்சேரி மாநில மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்டது. பல லட்சம் மக்கள் புயல் பாதிப்பிலிருந்து இன்னும் மீள முடியாமல் தவித்து வருகின்றனர். நகர பகுதியில் வெள்ளம் புகுந்ததால்  உடைமைகள், வீட்டு உபயோக பொருட்கள், சான்றிதழ்கள், மோட்டார்சைக்கிள்கள், கார்கள் சேதமாகி மக்கள் நிம்மதியிழந்துள்ளனர். பெஞ்ஜல் புயல் தமிழகத்தை தாக்கியதால் அங்கும் வரலாறு காணாத மழை பொழிந்தது. இதனால் வீடூர், சாத்தனுõர் அணைகள் முழு  கொள்ளளவை அடைந்தது. இதனால் உபரி நீர் கடந்த 1- ஆம் தேதி நள்ளிரவு முன் அறிவிப்பின்றி திறக்கப்பட்டது. 

இந்த வெள்ளத்தால் புதுவை,  கடலூர் மிகப்பெரும் பாதிப்பை சந்தித்தது. தென்பெண்ணையாற்றில் கடந்த 2- ஆம் தேதி 1 1/2 லட்சம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்ததால்,  புதுவை, கடலுõர் மற்றும் தென்பெண்ணை ஆற்றின் கரையோர கிராமங்கள் நீரில் மூழ்கின. அன்று மாலை கடலூர்-புதுவை சாலை நீரில்  மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் புறவழிச்சாலை வழியாக போக்குவரத்து  மாற்றிவிடப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடலுõர்-புதுவை இடையே கூடுதலாக 10 கிமீ பயணம் செய்தனர். நேற்று மதியம்  கடலூர்-புதுவை சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம் வடிய துவங்கியதால், மாலை 3 மணிக்கு பிறகு கடலூர்-புதுவை இடையே நேரடி  போக்குவரத்து தொடங்கியது. இந்த நிலையில் இந்த சாலையில் நேற்று நள்ளிரவு 8 மணிக்கு, தவளக்குப்பம் அடுத்த இடையாஞ்சாவடி ஓடைப்பாலம் உள்வாங்கியது.இதனால், புதுவை-கடலூர் சாலையில் மீண்டும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 

கடலூர் சென்ற அனைத்து வானங்களையும், போலீசார்  முருங்கப்பாக்கம் சந்திப்பு, கொம்பாக்கம் வழியாக திருப்பி விட்டனர். தகவலறிந்த, முதல. அமைச்சர் ரங்கசாமி, கலெக்டர் குலோத்துங்கன், சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பாலம்  உள் வாங்கியதால் எடுக்க வேண்டிய நடவடிக்கை  பற்றி, அதிகாரிகளுடன் முதல அமைச்சர் ஆலோசனை நடத்தினார். புதுவை - கடலூர் சாலையில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், கட்டப்பட்ட பாலம், சேதமடைந்தது. அதனை அடுத்து, அதன் அருகே புதிய  பாலம் கட்டப்பட்டு, 1992ல் திறக்கப்பட்டது. கடந்த 1 ஆம் தேதி வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கரைபுரண்டு ஓடிய  வெள்ளம் சங்கராபரணி ஆறு, நோணாங்குப்பம் ஆற்றில் கடந்த 2ந் தேதி பெருக்கெடுத்தது. அப்போது, இடையார்பாளையம் என்.ஆர்.நகர்,  அருகே ஆற்றின் கரை உடைப்பு ஏற்பட்டு, உபரி தண்ணீர், இடையார்பாளையம் ஆற்று பாலத்தின் வழியாக ஓடியது. அதிக வேகத்தில் சென்ற வெள்ளத்தால் பாலத்தின் அடியில் மண் அரிப்பு ஏற்பட்டு, பாலம் உள் வாங்கியுள்ளது. பாலத்தின் அருகே உள்ள தனியார் படகு குழாம்  ஆற்று தண்ணீர் சுலபமாக செல்ல முடியாமல் தடுத்ததால்தான், பாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பாலம் உள் வாங்கியதை சீர் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.