×

டான்ஸ் மாஸ்டர் ஜானிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

 

பாலியல் வன்கொடுமை வழக்கில் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஜானி மாஸ்டருக்கு உப்பரப்பள்ளி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


டோலிவுட் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் பலமுறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் உதவி நடன இயக்குனர் அளித்த புகாரின் பேரில், ஜானி மாஸ்டர் மீது நரசிங்கி காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.  பாதிக்கப்பட்ட பெண் ராயதுர்கம் காவல்நிலையத்தில் முதலில் புகார் அளித்ததால் ஜுரோ  எஃப்ஐஆர் பதிவு செய்து நரசிங் காவல் நிலையத்திற்கு வழக்கு  மாற்றப்பட்டு அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் தலைமறைவாக இருந்த ஜானி மாஸ்டர் கோவாவில் இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார்   அவரை கோவாவில்  கைது செய்தனர். 

பின்னர் ஐதராபாத் அழைத்து வரப்பட்ட அவரை மருத்துவ பரிசோதனை செய்த பிறகு உப்பரப்பள்ளி  நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டது. இதில் போக்சோ நீதிமன்றம் ஜானி மாஸ்டருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து ஜானி மாஸ்டரை செர்லோப்பள்ளி சிறைக்கு போலீசார் அழைத்து சென்று அடைத்தனர். இதன் மூலம் ஜானி மாஸ்டர் அக்டோபர் 3ம் தேதி வரை நீதிமன்ற  காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.