×

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியாரை பெட்ரோல் ஊற்றி எரித்த மருமகள்

 

கண்டமங்கலம் அருகேயுள்ள என்ஆர்பளையத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியாரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி எரித்த மருமகள் மற்றும் கள்ளக்காதலனை கண்டமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகேயுள்ள என்.ஆர் பாளையத்தை சார்ந்த கருணாமூர்த்தி மற்றும் பன்ருட்டி பாலூரை சார்ந்த சுவேதா என்ற இருவரும் காதலித்து கடந்த 2024 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு கணவர் கருணாகரன் பணி நிமித்தாக சென்னைக்கு சென்று விடுமுறை தினங்களில் மட்டுமே வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில் சுவேதாவிற்கு அவர் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசிக்கும் சதீஷ் குமாருடன் கடந்த இரு மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. கள்ளகாதலில் சுவேதாவும், சதீஷ்குமாரும் அடிக்கடி திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளனர். 

சுவேதா கள்ளக்காதலில் இருந்ததை அறிந்த அவரது மாமியார் ரமணிக்கு தெரிந்து மருமகளை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுவேதா தனது கள்ளக்காதலுடன் இணைந்து கடந்த 30.10.2024 ஆம் தேதி மாமியார் ரமணி தூங்கி கொண்டிருந்த போது வீட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். வீட்டில் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்க்கத்தினர் ரமணியை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தபோது 31 ஆம் தேதி சிகிச்ச பலனின்றி ரமணி உயிரிழந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ரமணியின் இரண்டாவது மகன் தட்சணாமூர்த்தி கண்டமங்கலம் காவல் நிலையத்தில் தனது தாய் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்ததில் சுவேதா தனது கள்ளக்காதலுடன் இணைந்து ரமணியை கொலை செய்ததும், கல்லூரியில் கல்வி பயிலும் காலத்திலிருந்தே சுவேதா பலருடன் தொடர்பில் இருந்தது விசாரனையில் தெரியவந்தது. இதனையடுத்து கண்டமங்கலம் போலீசார் சுவேதா மற்றும் சதீஷ் ஐ கைது செய்து சிறையிலடைத்தனர்.*