×

8 கி.மீ வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 2 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை

 

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்துவருகிறது.


வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து புயலாக மாறி தமிழக கடற்கரை நோக்கி வர வாய்ப்பு இருப்பதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களில் கன மழைக்கான எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.


இந்நிலையில் சென்னையிலிருந்து 720 கி.மீ தெற்கு தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக வலுவடையும் என்றும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்பகுதியை நோக்கி வரும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 8 கி.மீ வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

நாகப்பட்டினத்தில் இருந்து 520 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதனால் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.