×

ராமநாதபுரத்தில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்- 16 பேர் அனுமதி

 

இராமநாதபுரத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 16 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கி உள்ளதால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு டெங்கு வார்டில் இதுவரை 16 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுமட்டுமின்றி பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் ஆங்காங்கே பொதுமக்கள், டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

இராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பாக இராமநாதபுரத்தில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக ஆங்காங்கே மழை நீர் கழிவுநீருடன் தேங்கி நிற்பதால் கொசுக்களின் உற்பத்தி அதிகமாகி இது போன்ற தொற்றுகள் பரவி வருகிறது.