×

மகளிர் உரிமைத் தொகை குறித்து பெருமையாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

 

நாகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக நாகையில் நடைபெற்ற அக்கரைப்பேட்டை மனோகரன் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கு சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். பின்னர் மணவிழா மேடையில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எவ்வளவு மாவட்டத்திற்கு சென்றாலும் சொந்த மண்ணிற்கு வருவதில் இனம் புரியாத மகிழ்ச்சி என்றும், துணை முதல்வர் பொறுப்பை ஏற்றபிறகு முதன்முறையாக நாகை மாவட்டம் வருவதில் கூடுதல் மகிழ்ச்சி என கூறினார்.

மந்திரம் சொல்லாமல் தற்போது நடைபெற்றுள்ள சுயமரியாதை திருமணத்தை நினைத்தால் பெருமையாக உள்ளது. சுய மரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரத்தை கொண்டு வந்தவர் அண்ணா என்று பேசினார். மேலும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து அனைத்து திட்டங்களையும் தமிழக முதல்வர் நிறைவேற்றி வருகிறார். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிக பெண் பிரதிநிதிகளை உருவாக்கிய பெருமை முதல்வரை சாரும் என்றார். 

பெண்கள் உயர்கல்வி படிக்க தமிழக முதல்வர் கொண்டுவந்த புதுமைப்பெண் திட்டம் (Pudhumai Penn), மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் (tamil puthalvan thittam) உள்ளிட்ட இந்தியாவை திரும்பி பார்க்கும் கலைஞர் மகளிர் உரிமை (Kalaingar Magalir Urimai Thogai) தொகையில் மாதம் மாதம் 1 கோடியே 16 லட்சம் மகளிர் பயன் அடைகின்றனர். இதனை பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. இதையெல்லாம் பார்க்கும் போது தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்று எரிச்சல் உண்டாகிறது என விமர்சனம் செய்தார். எப்படியாவது திமுக கூட்டணி உடையாதா என்று எடப்பாடி பழனிசாமி எதிர்பார்க்கிறார். வருகின்ற தேர்தலில் இந்தியா கூட்டணி தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையிலான வெற்றிக் கூட்டணியை அமைத்து, சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளை வென்று காமிக்கும் என்றும் பேசினார்.