×

ஆம்பளைங்க கஷ்டப்படுறாங்க...“எங்களுக்கு டாஸ்மாக் வேண்டும்” ஊரே திரண்டு ஆட்சியரிடம் மனு

 

தருமபுரி பென்னாகரம் அருகே டாஸ்மாக் கடை வைக்கக்கோரி கிராம மக்கள் குடும்பம் குடும்பமாக திரண்டு வந்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். 

மதுபான கடையை அமைத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும், பள்ளிகள், கோயில்கள் உள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுக்கும் நிலையில் தருமபுரி மக்கள் டாஸ்மாக் வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி பென்னாகரம் அருகே டாஸ்மாக் கடை வைக்கக்கோரி கிராம மக்கள் குடும்பம் குடும்பமாக திரண்டு வந்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அஞ்சே அள்ளி ஊராட்சிக்குட்பட்ட நலப்பரம்பட்டி, கெட்டூர், ஆதனூர் உள்ளிட்ட கிராம மக்கள் அருகில் மதுபான கடை இல்லாததால் 20 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டியிருப்பதாகவும், உள்ளூரில் சந்து கடைகளில் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பதாகவும் புகார் எழுந்துள்ளது. விவசாய வேலை செய்துவிட்டு வரும் எங்களுக்கு சரக்கு வேண்டும் என்றும், அதற்கு டாஸ்மாக் கடை அவசியம் வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.