#PMK தர்மபுரி பாமக வேட்பாளர் மாற்றம்?
Mar 22, 2024, 18:34 IST
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களின் பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது.
அந்தப் பட்டியலில் தர்மபுரி தொகுதியில் தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் மாற்றப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு பதிலாக அன்புமணி ராமதாஸ் அவர்களின் மனைவி சௌமியா போட்டியிடுவார் என்று பாமக வட்டாரங்களில் தெரிவித்தனர்.