×

நாளை காலை தர்ணா போராட்டம்- அரசு மருத்துவ சங்க கூட்டமைப்பு

 

சென்னை கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவர் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்து நாளை (நவ.14) காலை தர்ணா போராட்டம் நடைபெறும் என அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மருத்துவர்கள் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

கிண்டி அரசு மருத்துவமனையில் இன்று காலை அரசு மருத்துவர் தாக்கப்பட்டதன் எதிரொலியாக  சென்னை தலைமை செயலகத்தில்  மருத்துவர்கள் பாதுகாப்பு குறித்து மருத்துவ சங்கங்களுடன் மருத்துவர்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இதில் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், துறை செயலாளர் சுப்ரியா சாகு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம், ஊரக நலப்பணிகள் இயக்குனர் ராஜமூர்த்தி, மருத்துவ கல்வி இயக்குனர், மாநகர காவல் ஆணையர், சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் உள்ளிட்டோர் அரசு தரப்பிலும் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், மருத்துவ அலுவலர்கள் சங்கம், அரசு மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்டோர் மருத்துவர்கள் சங்கத்தினர் தரப்பிலும் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அரசு மருத்துவ சங்கத்தின் கூட்டமைப்பு தலைவர் பாலகிருஷ்ணன், “மருத்துவர் மீதான தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், வரும் ஞாயிற்றுக்கிழமை செயற்குழு கூட்டம் கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளோம். இந்திய மருத்துவ சங்கம் என்பது தனியார் மருத்துவர்கள் உள்ளடங்க சங்கம்  பணி புறக்கணிப்பு போராட்டம் மக்களுக்காக மாற்றிய உள்ளோம். மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால், சிரையில் இருந்து வெளிவராத நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனைக்குள் சிறிய காவல் நிலையம் அமைப்பதற்காக பணிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. மருத்துவமனைகளில் இனிமேல்,துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். காலை 8 மணி முதல் 10 மணி வரை தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம். தமிழ்நாடு முழுவதும் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும்” என தெரிவித்தார்.