×

Gpay-ல பணம் அனுப்பும்போது மாத்தி அனுப்பிட்டீங்களா?

 

தவறுதலாக செலுத்திய பணத்தை திரும்ப பெறமுடியுமா, எப்படி பெறுவது, யாரை கேட்பது என்கிற குழப்பங்கள் மக்களுக்கு இருக்கின்றன.

பணத்தை தவறான யு.பி.ஐ ஐடி-க்கோ மொபைல் எண்ணிற்கோ செலுத்தி விட்டாலும், உங்கள் அங்கீகாரம் இல்லாமல் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டு இருந்தாலும், ஒருவேளை நீங்கள் மோசடி செய்யப்பட்டிருந்தாலும், முறைகேடான வழியில் உங்கள் பணம் செலுத்தப்பட்டிருந்தாலும், உங்கள் பரிவர்த்தனை தோல்வி அடைந்த போதிலும் உங்கள் வங்கி கணக்கில் இருந்த பணம் டெபிட் ஆகியிருந்து, நீங்கள் பணம் செலுத்த வேண்டியவருக்கு பணம் சென்றடையாமல் இருந்தாலும், நீங்கள் தாராளமாக உங்கள் பணத்தை திரும்ப பெற முயற்சிக்கலாம்.

பணம் பரிவர்த்தனையை திரும்ப பெற நீங்கள் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள்:

சம்பந்தபட்ட நபரை தொடர்பு கொள்ளுதல்:

அதாவது நீங்கள் பணத்தை தவறாக செலுத்திய அந்த நபரை அணுகி உங்கள் நிலமையை விவரியுங்கள். 

அவர் ஒப்புக்கொண்டால் உங்களுக்கு பணத்தை அவரே திருப்பி அனுப்பலாம்.

வங்கியின் வாடிக்கையாளர் சேவை:

சம்பந்தபட்ட நபர் ஒப்புக்கொள்ளாத நிலை அல்லது அவரை தொடர்புகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் உடனடியாக உங்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு புகாரளியுங்கள். அவர்கள் உங்களுக்கு பரிவர்த்தனையை திரும்ப பெற வழிக்காட்டுவார்கள்.

யு.பி.ஐ பரிவர்த்தனை ரி -கால்:

நீங்கள் அனுப்பிய பணத்தை திரும்ப பெற பல வங்கிகள் டிரான்ஸாக்ஷன் ரி-கால் போன்ற அம்சங்களை வழங்குகின்றன. 

உங்கள் வங்கியில் இந்த அம்சம் உள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ளவும்.

என்.பி.சி.ஐ ஹெல்ப் டெஸ்க்:

நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI), மின்னஞ்சல் (upi@npci.org.in) அல்லது அவசர உதவி எண்ணை (022-4000-9100) தொடர்பு கொள்ளலாம். 

பணம் மாற்றி அனுப்ப பட்ட சில மணி நேரங்கள் நீங்கள் பணத்தை திரும்ப பெற முயற்சிக்க வேண்டும். இதை நினைவில் கொள்ளுங்கள்.