×

கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர் ஈபிஎஸ் - திண்டுக்கல் சீனிவாசன்

 

கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர் ஈபிஎஸ் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திருச்சி அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், “வைத்திலிங்கம் வீட்டில் ரெய்டு நடந்துள்ளது. அதனால் பாஜக கூட்டணியை விட்டு வர முடியாது. டிடிவி தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோருக்கு பல நெருக்கடி இருக்கிறது. நாம் பல்வேறு விஷயங்களை திரை மறைவில்தான் செய்ய வேண்டியது இருக்கிறது. அப்போதுதான் எதிரிகளை வீழ்த்த முடியும். பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு என அனைத்து கட்டணமும் உயர்ந்து உள்ளதை எதிர்த்து அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் செய்வதை பார்த்திருக்கிறீர்களா? உண்டியல் சத்தத்தையே காணோம்.

கடவுளால் பார்த்து அனுப்பி வைக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. திமுகவினரின் எண்ணத்தை தவிடு பொடியாக்கி அதிமுகவை ஈபிஎஸ் கட்டி காத்து வருகிறார். பூத் கமிட்டி வேலை பார்க்க சொன்னால் கூட அதிமுகவினர் பணம் கேட்கிறார்கள். வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு முகாமில் கூட அதிமுகவினர் ஆர்வம் காட்டவில்லை. பூத் கமிட்டிக்கு ரூ.20, ரூ.200 கொடுத்த காலம் சென்று தற்போது ரூ.5,000, ரூ.10,000 வரை கேட்கிறார்கள்” என்றார்.