”எடப்பாடி அண்ணன் என்ன கூப்பிட்டு நீங்க பேட்டி கொடுத்து கூட்டணியை கெடுத்துடாதீங்கனு சொன்னாரு..”- திண்டுக்கல் சீனிவாசன்
எடப்பாடி அண்ணன் என்ன கூப்பிட்டு நீங்க பேட்டி கொடுத்து கூட்டணியை கெடுத்துடாதீங்கனு சொன்னாரு.. பேட்டி கொடுத்தா அப்புறம் கட்சியை விட்டே நீக்கிடுவாரு எங்கள.. என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலகலப்பாக கூறினார்.
திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட கள ஆய்வு கூட்டம் திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் கலந்துகொண்டு உரையாற்றிய திண்டுக்கல் சீனிவாசன், “கூட்டணி குறித்து எடப்பாடி நான் பார்த்து கொள்கிறேன் என சொல்கிறார். நீங்கள் பேட்டி எல்லாம் கொடுத்து அதை கெடுத்து விட வேண்டாம் எனக் கூறி உள்ளார். நீங்கள் பேட்டியில் யாரையாவது திட்டிட்டு வர்றீங்க... அவங்க கிட்ட நான் போய் பேசிட்டு வந்து இருப்பேன். அவங்க எனக்கு போன் பண்ணி கேப்பாங்க எனக் கூறினார். எனவே நாங்கள் நிருபர்களை பார்ப்பது இல்லை என எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்துவிட்டோம்.
கூட்டணிக்கு வருபவர்கள் 20 சீட் கொடுங்க 50 கோடி , 100 கோடி கொடுங்க என கேட்கின்றனர். ஸ்டாலின் கொள்ளை அடித்து வைத்து உள்ளார், கூட்டணி பேசியவுடன் பெட்டிய தூக்கி கொடுக்கிறார். ஆனால் அங்கு சென்றால் வெற்றி பெற முடியாது எடப்பாடி தான் வெற்றி பெறுவார்” என்றார்.