×

அடாவடி செய்த தனியார் பேருந்து ஓட்டுநர்! காரில் இருந்து இறங்கி அதிரடி காட்டிய இயக்குனர் சேரன்

 

தனக்கு பின்னால் தொடர்ந்து ஹாரன் அடித்து வந்த தனியார் பேருந்தால் ஆவேசமடைந்து காரில் இருந்து இறங்கிய இயக்குனர் சேரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு நாள்தோறும் அதிக அளவில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பேருந்துக்கும் மூன்று முதல் ஐந்து நிமிட இடைவெளியில் புறப்பட்டு வருவதால் அவர்களுக்குள் நேரம் கடைப்பிடிப்பதற்கான கால அவகாசம் குறைவாக இருப்பதால் இந்த பேருந்துகள் அதிவேகமாக அந்த சாலையில் செல்வது வழக்கம். அதேபோல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்களை பயன்படுத்தி அதிக அளவில் ஒலி எழுப்பியவாறு இந்த பேருந்துகள் செல்கின்றன. இந்த நிலையில் புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்த இயக்குனர் சேரன் தன்னுடைய காரில் பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது நீண்ட நேரமாக அதிக அளவில் ஒலி எழுப்பிய வண்ணம் ஒரு தனியார் பேருந்து வந்துள்ளது. அந்த தனியார் பேருந்துக்கு வழிவிட இடம் இல்லாத நிலையில் அந்தப் பகுதியில் சேரனின் கார் வந்து கொண்டிருந்து. 

அதிக அளவில் ஒலி தொடர்ந்து ஏழுப்ப பட்டதை தொடர்ந்து அங்கு தனது காரை நடுரோட்டில் நிறுத்திய சேரன் அந்த பேருந்து ஓட்டுனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒதுங்குவதற்கு வழி இல்லாத சாலையில் அதிக ஹாரன் எழுப்பி எதற்கு மக்களுக்கு இடையூறு செய்கிறீர்கள் எப்படி ஒதுங்கி உங்களுக்கு வழிதர முடியும் என கேள்வி எழுப்பினர். அதனைத் தொடர்ந்து வாக்குவாதம் ஆகவே அந்த பகுதியில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் பொதுமக்கள் மற்றும் மற்ற பேருந்தில் வந்த பேருந்து நடத்துனர்கள் இறங்கி சேரனை சமாதானம் செய்து அவரது காரின் வழி அனுப்பி வைத்தனர். இதே போல் தொடர்ந்து இந்த பகுதியில் செல்லும் போதெல்லாம் தனியார் பேருந்துகள் அதிக அளவில் ஒலி எழுப்பி செல்வதாகவும் இதற்கு போக்குவரத்துக் காவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேரன் கேட்டுக் கொண்டார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.