இயக்குநர் மோகனை சொந்த ஜாமீனில் விடுவித்த நீதிபதி
திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலந்ததாக நாடு முழுவதும் சர்ச்சை எழுந்து வரும் நிலையில், திரைப்பட இயக்குனரான மோகன் தனியார் youtube சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில் தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவை ஏற்படுத்தும் மருந்துகளும், கருக்கலைப்பு மாத்திரைகளும் கலக்கப்படுவதாகவும், இது இந்துக்களுக்கு எதிராக நடக்கும் செயல் எனவும் பேசியிருந்தார்.
இது தொடர்பாக பழனி முருகன் கோயில் நிர்வாகம் சார்பாக பழனி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடமும் ஒரு புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த திருச்சி மாவட்ட போலீசார் திரௌபதி மற்றும் பாகசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் மோகனை இன்று காலை சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள அவர் வீட்டில் வைத்து கைது செய்தனர்.
இந்த வழக்கில் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் இயக்குநர் மோகன் ஆஜர்படுத்தப்பட்டார். முறையான சட்ட முறைகள் கைதின் போது, பின்பற்றப்படவில்லை எனக்கூறி திருச்சி நீதிமன்ற நீதிபதி இயக்குனர் மோகனை சொந்த ஜாமினில் விடுவித்தார். புகார் குறித்து வழக்குப்பதிவு செய்தது சரியே, ஆனால் கைது சட்டவிரோதம் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
...