×

"செல்வி அக்காவால இந்த துக்கத்துல இருந்து மீளவே முடியல"- பிரேமலதா விஜயகாந்த்

 

கோபாலபுரத்தில் உள்ள மூத்த பத்திரிகையாளர் முரசொலி செல்வம் உடலுக்கு, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மற்றும் எல்.கே.சுதிஷ்  அஞ்சலி செலுத்தினர்.

முரசொலி செல்வம் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “முரசொலி செல்வம் இறந்த செய்தியை கேட்டு இன்று காலை மிகவும் அதிர்ச்சியடைந்தேன். கட்சிக்கு அப்பாற்பட்டு கேப்டன் மறைவுக்கு செல்வி அக்கா எனக்கு அவ்ளோ ஆறுதல் சொன்னாங்க... தைரியம் சொன்னாங்க! செல்வி அக்காவால இந்த துக்கத்துல இருந்து மீளவே முடியல. உடல்நலக்குறைவால் செல்வம் இறந்தாலும், முரசொலிக்கும், திமுகவுக்கும் இது மிகப்பெரிய இழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். முரசொலி செல்வத்தின் மறைவுக்கு தேமுதிக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் கூறினார்.

முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “திரு.முரசொலி செல்வம் அவர்கள் இன்று (10.10.2024) வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு துயரமடைந்தேன். கேப்டன் அவர்களுடன் நல்ல நட்புடன் பழகக் கூடியவர், அமைதியானவர், அன்பானவர் அவருடைய இழப்பு திமுகவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பு.. எனவே அவர்கள் குடும்பத்தாருக்கும், திமுகவினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.