“நாத்தம் புடிச்ச சேர்மன் பதவி, 2 கோடி ரூபாய் கொடுத்துதான் சீட்டு வாங்கினோம்”.. தங்கையின் ஆதங்க வீடியோ
Nov 26, 2023, 16:46 IST
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் திமுக 12, அதிமுக 1, எஸ்டிபிஐ 1, சுயே 7 என 21 கவுன்சிலர்கள் உள்ளனர். நகராட்சி தலைவராக பை. செ. செஹனாஸ் ஆபிதா (திமுக), துணைத் தலைவராக ஹமீது சுல்தான் ( திமுக) இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் 21 வார்டுகளுக்கும் தெரு விளக்குகள் பொருத்த ரூ.1.18 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டு 3 சதவீத கமிஷன் நகராட்சி தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தொகையை கவுன்சிலர்கள் யாருக்கும் பங்கு பிரித்து தர முடியாது என, நகராட்சி தலைவரின் தங்கை ஹமீதா, நகராட்சி தலைவர் அவரது சகோதரர் இஸ்திகா ஹசன் (மாவட்ட திமுக அயலக அணி அமைப்பாளர்) ஆகியோர் முன்னிலையில் நகர்மன்ற அலுவலகத்தில் கவுன்சிலர்களிடம் நவ.18 ஆம் தேதி ஆக்ரோஷமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.